March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாணவர் நலன் கருதி லீவு கொடுங்க சார்

சளி, காய்ச்சல்
மாணவர்கள் நலன் கருதி மெடிக்கல் லீவு வேண்டும் 8ம் வகுப்பு மாணவர் தலைமையாசிரியருக்கு கடிதம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மருத்துவ மனையில் தனி வார்டில் அறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் மற்றும் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் சென்னை அடுத்த பூந்தமல்லிஅருகே உள்ள முகலிவாக்கத்தைசேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . அதில் கூறியிருப்பதாவது:
நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனக்கு சளி இருமல் காய்ச்சல் அறிகுறி இருப்பதால் மற்ற மாணவர்கள் நலன் கருதி எனக்கு நீண்ட விடுப்பு (மெடிக்கல் லீவு) தர வேண்டும். இது பற்றி அரசாங்கமும் சுற்றறிக்கைசெய்துள்ளது.சளி காய்ச்சல் உள்ள மாணவர்கள் வரவேண்டாம்என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மற்ற மாணவர்கள் நலன் கருதி நீன்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாட்களாக பதிவு செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தலைமையாசிரியர் விசாரிக்கும்போது விளையாட்டாக விடுமுறை விண்ணப்பம் கடிதம் எழுதியதாக கூறினார். பின்னர் மாணவரை கண்டித்து அறிவுரை வழங்கினார். மாணவன் செயல் பற்றி அவரது பெற்றோரிடமும் தெரிவித்தனர்.

About Author

error: Content is protected !!