June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாசாணியம்மனை வழிபட நம்பிக்கை கிடைக்கும்

மாசாணியம்மன் தாயே போற்றி மாசாணியம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் எல்லா வளமும் பதினாறு பேறும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் சித்தர்கள் திருவடி சரணம் குருநாதர் அழகுராஜா ஆலோசனையின் பேரில் மாசாணியம்மன் வழிபாடு ஒரு சனிக்கிழமை தரிசனம் செய்தோம் குருநாதர் என்ன சொன்னாலும் சிஷ்யர் செய்து விடுவது குருபக்தி அப்படி குருபக்திக்கு ஒப்பாக ஏகலைவன் தன் கட்டை விரலை துரோணச்சாரியார் குருதட்சணையாக கேட்டவுடன் அளித்தவன் பரசுராமர் ஜமதக்னி முனிவர் சொன்ன வார்த்தைக்காக தாயின் தலையை கொய்தவர் குருபக்திக்கு ஈடான பக்தி இந்த உலகத்தில் ஏதுமில்லை. குரு என்றுமே நம்மை பற்றியும் நம் வளர்ச்சியை பற்றியும் சிந்திப்பவர் மேலும் என் குருநாதர் எப்பொழுதும் எமக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்வதுண்டு

நல்ல குரு கிடைத்து விட்டாலே போதும் வேறென்ன வேண்டும் ஜோதிடத்தில் ஈடுபாடு கொண்டதற்கும் ஜோதிட பலன்களை துல்லியமாக கணிப்பதற்கும் எமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தவர் என் குருநாதர் என் பாக்கியம் இப்படியொரு நல்ல குரு கிடைத்தது
உக்கிரமான தெய்வங்களை வழிபடுவது ராகு பரிகாரம் மாசாணியம்மன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவள் மாசாணியம்மன் கருவறுத்து கொல்லப்பட்டவள் என்றும் சிலர் சொல்வதுண்டு
கலியுகத்தில் உக்கிர தெய்வங்கள் மிகுந்த சக்தியுடன் விளங்குவார்கள் காளி துர்க்கை நரசிம்மர் ஆஞ்சநேயன் சரபேஸ்வரர் வராஹி மஹிசாசூரமர்த்தினி வீரபத்திரர் பைரவர் போன்ற உக்கிர தெய்வங்களை வழிபட்டால் நமக்கு எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து கொள்ளும் தைரியம் அவர்கள் மூலமாக கிடைக்கும் மாசாணியம்மன் உக்கிர தெய்வமாகவே வீற்றிருந்தாள்
வேண்டுதல் சீட்டு என்று ஒன்று உள்ளது நமது கோரிக்கைகள் வேண்டுதல்கள் எழுதி கொடுத்தால் அந்த பேப்பரை மாசாணியம்மன் கையில் வைத்து வழிபடுகிறார்கள் வேண்டுதல் நிறைவேறுகிறது

மேலும் அங்கு ஒரு நீதிக்கல் ஒன்று உள்ளது மிளகாய் அரைத்து பூசும் வழக்கம் உள்ளது நமக்கு ஏதாவது பொருள் தொலைந்தாலோ எதிரிகள் ஏதாவது பில்லி சூனியம் வைத்து இருந்தாலோ பணம் தர வேண்டியவர்கள் ஏமாற்றி இருந்தாலோ வேறு ஏதாவது துரோகம் செய்திருந்தாலோ நமக்கு நீதி கிடைக்க இங்கு வந்து மிளகாய் அரைத்து நம் கையால் நீதிக்கல்லுக்கு பூசி விட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் மூன்று மாதங்களுக்குள் வேண்டுதல் நடந்து விட்டால் மீண்டும் வந்து மாசாணியம்மன் கோவிலில் அம்பாளுக்கு எண்ணெய் காப்பு செய்ய வேண்டும்.மிளகாய் அரைத்து பூசுபவர்கள் அங்கிருந்து எந்த பொருளும் எடுத்து வர கூடாது மிளகாய் அரைத்து பூசியவுடன் மறுபடியும் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டுமாம் இதெல்லாம் அங்கு தெளிவாக விசாரித்தமையால் தெரிந்து கொண்டவைதான் கண் கண்ட தெய்வம் மாசாணியம்மன் அம்பாளின் படுத்து கிடக்கும் உருவானது பிரம்மாண்டமாக உள்ளது கண்கள் பேசுகிறது கண்களுக்கு ஜீவன் உள்ளது துடியாக இருக்கிறாள் தாய் மாசாணியம்மன் போற்றி

குறுநில மன்னனின் கூற்று நன்னன் எனும் குறுநில மன்னன் கொங்குச் சீமையின் இந்தப் பகுதியை ஆண்டு வந்த போது அவருக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு மரத்தின் மாங்கனியானது கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம், அதை கரையில் இருந்த பென் ஒருத்தி எடுத்துத் தின்ன முற்பட்டபோது அந்த குறுநில மன்னன் அவளை வாளால் வெட்டித் தண்டித்து விட்டான். தவறெதுவும் செய்யாத பெண்ணை அவன் இப்படித் தண்டித்தது தவறு என்று உரியவர்கள் எடுத்துக் கூறினராம் எனினும் இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை அமைதியடையாத அவள் உள்ளம் மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசானியம்மனாக உருவெடுத்தாக ஒரு பழங்கதையும் கூறப்படுகிறது.

துக்க நிவாரணி : இங்கே வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான நம்பிக்கை உள்ளது.

வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாசானியம்மனைத்தான்.

மிளகாய் பூசும் நீதிக் கல் அம்மனின் மண்டபச் சுவற்றிலே ஸ்ரீராமபிரான் தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. மகாமுனியப்பரின் தெற்குப்புறம் லிங்க வடிவத்திலான கல் ஒன்று கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது. பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் சொத்துக்களையோ தமது உடைமைகளையோ பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளனவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று தங்களுக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்குப் பகுதியில் போடப்பட்டுள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து மேற்குறித்த இடத்தில் உள்ள லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் பரிகாரம் பெறுவதும் குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளாவதும் இன்றைக்கும் கூட இந்தத் தெய்வத்தின் நீதித் தன்மையை நடைமுறையில் காட்டுகிற செயல்களாக விளங்கி வருகின்றன. அமைவிடம் அமைவிடம் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

தனிச் சிறப்பு கோவை மண்டலத்தின் அம்மன் கோயில்களில் பலராலும் அறியப்பட்ட கோயிலாக மாசானியம்மன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசானியம்மன் எனும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபேறாகியும் விட்டது. எனினும் இது ஆதிபராசக்தியின் கோயில் தான் என்பதும் பரவலாகவே அறியப்பட்டு உள்ளது.

அம்மன் திருக்கோலம் பதினேழு அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலை வைத்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டிப் படுத்த நிலையில் காட்சி தருகின்ற இந்த அம்மனின் திருக்கோலமானது மற்ற கோயில்களில் காணப்பெறாத ஒரு வடிவமாகும். அம்மனின் கால்மாட்டில் அசுரன் ஒருவனின் உருவம் உள்ளது இதனையடுத்து அருகிலேயே கிழக்கு நோக்கி இரண்டடி உயரமுள்ள மாசனியம்மனின் திருவுருவம் ஒன்றும் நின்ற நிலையில் காட்சியளிக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு இந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனைமலையில் மயான பூமியில் மகாசக்தி தோன்றி ராமபிரானுக்கு அருள் வழங்கியிருக்கிறாள். இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூழலில் ராமபிரான் ஆனைமலைக்கு வந்து சென்றதாக வழிவழியாகக் கூறப்பட்டு வரும் வாய்மொழிக்கதையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகின்றது.

மயான ருத்திரி உப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்தில் மண்ணையெடுத்து அதைக்கொண்டு சக்தியுருவம் ஒன்றை மகுடாசுரன் என்ற அரக்கனை அம்மன் தனது பாதங்களால் அழுத்திய நிலையில் இருப்பதான தோற்றத்தில் உருவாக்கி ஆகம விதிகளின்படி சக்தி வழிபாடு செய்துள்ளார். ஆதிபராசக்தி அவர் முன்னிலையில் மயான ருத்திரியாகத் தோன்றி ஸ்ரீராம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்குரிய வரமளித்து மறைந்துள்ளாள். இப்போது இங்கு அருள்பாலிக்கும் மாசனியம்மன் மேற்கண்ட காலத்தில் ராமரின் திருக்கரங்களினால் உருவாகி வழிபாடு செய்யப்பட்ட மகிமை வாய்ந்ததொரு இறைவி ஆவாள்.

அமைவிடம் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள். பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது.

இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை. நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான்.

அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது. கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள்.

பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள். அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது. கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள்.

அதோ விளக்கொளி தெரிந்தது. ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள். அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.

அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவைத் தட்டினான். மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.

அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான். அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான். ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை.

அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள். கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான்.

இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள். உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள்.

அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான். காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான்.

மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள். கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது.

மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள். இதைக் கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே!

தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான். அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல.

இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாகப் பிறக்கவில்லை. வானத்திலிருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.

இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும்.

அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள். இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர்.

அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள். அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.

ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.

தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.

பழங்காலத்தில் நன்னன் என்கிற மன்னன் ஆனை மலைப்பகுதியை ஆட்சி செய்து வந்தார் . அவரைச்சந்திக்க ஒரு துறவி வந்தார் .அவரை வரவேற்று பல உபசரிப்புகள் நன்னன் செய்தாராம் . அரசனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்து ” மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார் . உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன் ,முக்கியமான ஒன்று இதை உண்டபின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு .

இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்”’ . மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார் .சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில்ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார் . மரம்பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது .அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை என அறிவித்தார் . இதைக்கேள்லிப்பட்டதுறவி மன்னரிடம் வந்து ”மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள் . நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது . அதை தெய்வீகப்பெண்மணி ஒருவரே சாப்பிடுவார் . நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும் ”’ என உரைத்து கிளம்பினார் துறவி. மன்னர் நன்னன் அதை அலட்சியப்படுத்தி இந்த மாமரத்தில் பழுக்கும் பழத்த மாம்பழத்தை யாரேனும் சாப்பிட்டால் மரண தண்டணை என அறிவித்தான். தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார் . அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி ஆற்றில் குளிக்கச்சென்றார் . அங்குதான் அரசனின் நந்தவனமும் அதிசயமாமரமும் இருந்தது . தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து சாப்பிட்டார் . மற்ற பெண்கள் இது அரசகட்டளை இதை சாப்பிட்டு விட்டாயே ராஜ தண்டனை கிடைக்குமே என பதறினார்கள் . பயத்தில் உடனடியாக கிளம்பினார் . தாரணின் அப்பாவிடம் இந்த விஷயத்தை கூறினார்கள் . அதற்குள் இந்தவிஷயம் மன்னர் காதுக்கு எட்டியது .காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து அரண்மனைக்கு கூட்டிச்சென்றார்கள் .குற்றம் சாட்டப்பட்டது .தாரணி அழுது புலம்பினால் அரசரின் அறிவிப்பு அறியாமல்பிழையாகி விட்டது ,மன்னிக்கவேண்டினாள் . அரசனோ இரக்கில்லாமல் மரணதண்டனையை அறிவித்தான் . ஒரு மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் . என்புகழ் ஓங்கும் . உன் ஆட்சி அழியும் என சூளூரைத்து கொலைகளம் சென்று உயிர் பிரிந்தாள் . அவள் உடல் மயானம் எடுத்துச்செல்லப்பட்டது .அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து,மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசானி அம்மனாக தொழுதுசென்றார்கள் ‘ அரசரால் கொல்லப்பட்ட தாரணி தெய்வீக பெண் அவரே மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் . மாசாணி அம்மன் உக்கிர தெய்வம் . நீண்டவாக்கில் படுத்திருக்கும் அன்னை.பிற்காலத்தில் கொடுங்கோல் மன்னன் எதிரிகளிடம் இறந்தான் . கன்னி தெய்வத்தை பலியிட்ட இடம்

பிரேம்சந்த் நம்பிராஜன் சென்னை7708873905

ஜோதிடர் முகவரி

About Author

You may have missed

error: Content is protected !!