February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாங்குடி மருதனார் நினைவு தூணிற்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை

பாரதிதாசன்கிராமத்தில் பிறந்த மாங்குடி மருதனார். இவர் இயற்றிய 13 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளது.
அகநானூறு, புறநானூறு நற்றினை மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்களில் இவரது பாடல்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இத்தகைய சிறப்புகளை உடைய மாங்குடி
மருதனாருக்கு 1992ம் ஆண்டு தமிழக அரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. தமிழக  கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, சிவகங்கை, காஞ்சிபுரம்,கரூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சங்கப் புலவர்களின் நினைவுத் தூண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படுகிறது. தமிழின் தொன்மை பண்பாட்டு அடையாளங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்
தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் சங்கப் புலவர்கள் இயற்றியுள்ள பல பாடல்கள் உதவியாக உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்குடி மருதனாருக்கு இன்று மலர்தூரி
மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. எதிர்கால மாணவ சமுதாயத்தினர் இவரது சிறப்புகளை அறிந்து, ஆராய்ச்சி படிப்புகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகடிநச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர்.கா.பொ.இராசேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .அ.செந்தில்,சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சுப்பிரமணியன்,.பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர், தமிழக அரசின் தமிழ் செம்மல் விருதாளர் கவிஞர்
பேரா.மாங்குடி மருதனார் மன்ற நிர்வாகிகள் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்,அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!