May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மலைவாழ் மக்களோடு காவல் துறையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பாநதி நீர்த்தேக்கம் அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் குடியிருந்த பளிகர் இன மலைவாழ் மக்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு கருப்பாநதி நீர்த்தேக்கம் அருகே குடியமர்த்தபட்டனர்.

இவர்கள் மலையில் உள்ள தேன், காட்டு நெல்லி போன்றவற்றை பறித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை. இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு புளியங்குடி காவல் துறையினர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் சமூக அமைப்புகளும், இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு உதவிகள் செய்து அவர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.


அதே போல் இந்த வருடமும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த வருடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக மும்மதத்தினரும் இணைந்து, மலைவாழ் மக்களோடு பொங்கலிட்டு கொண்டாடினர். முடிவில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

About Author

error: Content is protected !!