May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மனுவை வாயில் கவ்வியபடி வந்த மாற்றுத்திறனாளி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாற்று திறனாளி ஒருவர் பலமுறை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் மனுவை வாயில் கவ்வியபடி சாலையில் முட்டி போட்டும், இரு கைகளை ஊன்றியும் சாலையில் செல்வது காண்போர் நெஞ்சை கலங்க வைக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான கதிரேசன். திருமணமாகாத இவர் தற்போது அவரது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கதிரேசனுக்கு பிறவியிலிருந்தே 2 கால்கள் செயல் இழந்து 100 சதவீதம் மாற்று திறனாளியாக உள்ளார்.

இந்நிலையில் இவர், இரு சக்கர வாகனம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படாததால் இரு சக்கரம் வாகனம் கேட்டு மனுவை வாயில் கவ்வியபடி சாலையில் முட்டிங்கால் போட்டு இரு கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு வத்திராயிருப்பு பகுதியில் சாலையில் சுற்றித் திரிவது காண்போர் நெஞ்சை கலங்க வைக்கிறது.

பலமுறை விண்ணப்பித்தும் தனக்கு இருசக்கரவாகனம் வழங்கவில்லை என்றும் 100 சதவீதம் மாற்று திறனாளியான தனக்கு இருசக்கர வாகனம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கதிரேசன் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

About Author

You may have missed

error: Content is protected !!