May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மனிதனை மனிதனாகப் பார்போம்

ண்மையில் ஒரு நண்பர் வீட்டுத் திருமண விழாவிற்கு சென்றிந்தோம் விழா முடிந்தது இரவு நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தோம் , மறுநாள் சிலர் தங்க வேண்டிய சூழல் ஒரு சிலரை இருக்க சொன்னார்கள் சிலர் சம்மதம் சொல்ல ஒரு சிலர் மறுப்பு சொல்வதுமாக இருந்தது  ,
இப்படி இருக்க ஒருவரை மட்டும் கட்டாயப்படுத்தி இருக்க சொன்னார்கள் அவரோ நாளைக்கு அவசியம் வேலைக்குப் போக வேண்டும் என சொல்ல ஆளாளுக்கு அவரை கட்டாயபடுத்தி இருக்க சொல்ல அவர் பிடிவாதமாக முடியாது என்று சொன்னார் , உடனே  ஒரு பெரியவர் இருடா நீ அப்படியே கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கிற சும்மா இரு என சொல்ல அந்தப் பெரியவருக்கு துணையாக அரசாங்கப் பணியில் இருக்கும் ஒருவர் டேய்  கூலி வேலைக்கு தானே போற  நாளைக்கு நீ லீவு போடு 500 ரூபா சம்பளம்  வாங்குவியா  நான்  உனக்கு 700  ரூபாய் தரேன் ரொம்ப பண்ணாதே என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ,
 இவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது , நீங்க நாளைக்கு லீவு போடுங்க   ஒரு நாளைக்கு என்ன சம்பளம் உங்களுக்கு வருதோ அதில் இருந்து ரெண்டு மடங்கு தரேன் என சொல்ல .பதிலுக்கு அவர் கோபப்பட அங்கு சின்ன கலவரம் நடந்தேறியது
 .,
அது முடிய  சில மணித்துளிகள் கடந்துவிட்டது , வீட்டு விழாவிற்கு வந்தவர்களை முதலில் மனிதனாகப் பாருங்கள் பிறகு அவர்களின் வேலையைப் பார்க்கலாம் ,
அரசு ஊழியர் என்றால் ஒரு பார்வை பிற வேலைகள் என்றால் ஒரு பார்வையும் பார்க்காதீகள் பொதுவா நம்மில் பலருக்கும் ஒரு எண்ணம் அதென்ன தினக் கூலி என்றால் ஒரு பார்வை அரசாங்கப் பணி என்றால் ஒரு பார்வை அப்படி ஒரு போதும் எண்ணாதீர்கள் ,
இன்று வயலில் தினக்கூலி வேலை பார்க்கும் பலர்  வரவில்லை என்றால் நமக்கு சோறு இல்லை , வயலில் கூலி வேலைக்கு ஆள்கிடைக்கமால் விவசாயிகள்  படும் திண்டாட்டம் சொல்லிமாளாது
அதே போலபலருக்கும்  இன்னொரு சிந்தனை மக்கள் மத்தியில் இருக்கு  உங்க பையன் கவர்மென்ட்  ஸ்கூலா ? படிக்கிறான் என இழுப்பார்கள் அப்படியே ஒரு   கேவலமானப் பார்வை ., வேலை மட்டும் அரசாங்கத்தில் வேணும் , படிப்பு  மட்டும் தனியார் பள்ளியில் படித்தால் கௌரவம் , என்ன  தான் உங்க நியாயம் ., தயவு செய்து உங்கள் குழந்தைகள் மத்தியில் இப்படி வேறுபாட்டை விதைத்து விடாதீர்கள் அதை நீங்கள் அறுவடை செய்யும் போது உங்கள் குழந்தையே உங்களை மதிக்காது

About Author

You may have missed

error: Content is protected !!