May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மதுபானத்திற்கு கூடுதல் விலை புலம்பும் குடிமகன்கள்

நெல்லை மாவட்டம் தென்காசியில் பல்வேறு அரசு மதுபானகடைகள் இயங்கி வருகிறது. இதில் தென்காசி திருநெல்வேலி சாலையில் 10703 என்ற அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கண்காணிப்பாளர்களாக பூபதி, தங்கராஜ் மற்றும் விற்பனையாளராக பாலகிருஷ்ண நாராயணன், கல்யான சுந்தரம், பட்டமுத்து, மாரித்துரை, கண்ணன், ராஜ்நாராயணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கடையில் மதுபானம் அதிக விலையில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கடையில் கடந்த பல மாதங்களாக அங்கு பணிபுரியும் நபர் ஒருவரின் நண்பர் ஒருவர் விற்பனை பணியில் அவருக்கு உதவியாக ஈடுபடுகிறார்.இப்படி வேற ஒருவர் உள்ளே வந்து விற்பனை செய்ய அனுமதி உள்ளதா ? அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் அல்ல. அவருக்கு ஊதியம் யார் வழங்குகிறார்கள்? என கேள்வி எழுந்துள்ளது. மதுபனம் அதிக விலைக்கு விற்படுவது என்ற குற்றசாட்டு இருந்த நிலையில் இவருக்கு அந்த பணத்தில் இருந்து ஊதியம் வழங்குகிறார்களா? இது டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறதா? என குடிமகன்கள் புலம்புகின்றனர். இதை நிர்வாகம் கண்டுகொள்ளுமா? விலை அதிகம் என குடிமகனகள் கேட்டால் இஷ்டம் இருந்தா வாங்கு இல்லையென்றால் போ என பேசும் உழியர்கள் மதுபானம் வாங்கினால் ரசீது கொடுக்க வேண்டும் அதெல்லாம் முடியாது என்கிறார்களாம் ,போதைக்கு அடிமையான ஒருவரிடம் இப்படி நடப்பது முறையா ? அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் முறைகேடுகளை கண்டுகொள்ளுமா ? டாஸ்மாக் நிர்வாகம்

About Author

error: Content is protected !!