February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்-சரத்குமார் வேண்டுகோள்

மததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம்கொரோனாவிற்கு எதிராக ஒன்றுபட்டு செயல்படுவோம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்

டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாக கொண்டு, 1926 – இல் இந்தியாவில் துவங்கப்பட்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் தப்லீக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் 8 – 10, 12 – 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவோம்.

இஸ்லாமிய மதமாநாடு (இஸ்திமா) மற்றும் மதப்பிரச்சாரக்கூட்டங்கள் (தப்லீக் ஜமாஅத்) வழக்கமாக நடைபெறும் ஒன்று என தெரிகிறது. உலகத்தில் கொரோனா வைரஸ் பரவி வந்த சூழலில், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இந்தியாவிற்கும் நோய் பரவுவதற்கான வாய்ப்பிருக்கும் என்று புரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக மாநாட்டினை தவிர்த்திருக்கலாம்.

ஆனால், மார்ச் முதல் வாரத்தில் கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவில் வெளிப்படவில்லை. மேலும், நோய்த்தொற்று அறிகுறி தெரிவதற்கே சில நாட்கள் ஆகும் என்ற சூழலில், மாநாட்டில் பங்கேற்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவோம் என்று அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நோய்த்தொற்று உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாத சூழல் என்றாலும், எதிர்பாராத விதமாக உங்களுக்கு தொற்று இருக்குமேயானால் அது மற்றவர்களுக்கு பரவும் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, அரசு எடுக்கின்ற முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, உங்களை குணப்படுத்தவும், உங்கள் குடும்பத்தார்க்கும், சுற்றத்தார்க்கும், சமூகத்தினருக்கும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், தாங்களாகவே மனிதாபிமானத்துடன் முன்வந்து நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா என்று பரிசோதித்து கொள்வதில் தவறில்லை என்று உணர்த்த ஆசைப்படுகிறேன். அதன்படி தாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி தாங்களாகவே முன்வந்து பரிசோதித்து கொண்டு தனிமைப்படுத்தி கொண்டால் சிறப்பாக இருக்கும்.

மேலும், உலகமே ஒருசேர சந்தித்து வரும் இக்கடினமான சூழ்நிலையில், மததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நாட்டிற்கு ஒற்றுமை மிக மிக அவசியம். ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழிகளை கடந்து ஒற்றுமையை பிரதிபலிக்கும் பிரதான நோயாக கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று உணர்த்தியிருக்கிறது. எனவே, சகோதரத்துவம், மனிதநேயத்துடன் ஒற்றுமையாக ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது.

ஆதலால், தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் மேற்குறிப்பிட்ட தேதியில் கலந்து கொண்ட சகோதரர்கள் அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பரிசோதனைக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

7824849263
044 – 46274411

விழித்திருப்போம்!
விலகியிருப்போம்!
வீட்டிலிருப்போம்!

About Author

error: Content is protected !!