May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மக்கள் நீதி மய்யம் கட்சியில் விழும் விக்கெட்டுகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் விலகியதை தொடர்ந்து…கடலூர் வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகிய 2பேர் விலகுவதாக அறிவிப்பு நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சி.கே.குமரவேல் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது. ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்திருக்கும் சூழலில் நேர்காணலுக்குக் கூட வராமல் தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல். ஏற்பு இதுகுறித்து குமரவேலிடம் விளக்கம் கேட்டும் அவர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே தன்னைத்தானே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொள்வது கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முரணாண ஒரு செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு. இதனால் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னோடியாக நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வர் சுகா பொருளாளர் பதவியில் இருந்து விலகினார்
தற்போது நடிகை கோவை சரளா இணைந்த ஓரிரு தினங்களில் வேட்பாளர் தேர்வு குழுவில் இடம்பெற்று இருப்பது பலருக்கு சங்கடத்தை கொடுத்து இருக்கலாம் எனத் தெரிகிறது ,மேலும் ஒரு தேர்தலை கூட சந்திக்கும் முன் சிலரின் விலகல் கட்சிக்கு பின்னடைவு என பலரும் கருதுகின்றனர்

About Author

You may have missed

error: Content is protected !!