May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எச்.வசந்த குமார் செய்தியாளர் சந்திப்பு

மக்களை பயமுறுத்தும் நோக்கில் சட்டங்கள் உள்ளது -நெல்லையில் எச்.வசந்தகுமார் எம்.பி குற்றச்சாட்டு

மக்களை பயமுறுத்தும் நோக்கில் தற்போது சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது நெல்லையில் எச்.வசந்தகுமார் எம்.பி குற்றச்சாட்டு

நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்பியுமான ஹெச், வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது

எச்.வசந்த குமார் செய்தியாளர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த கலவரம் வருத்தமளிக்கிறது, மத்திய அரசிடம் உள்ள உளவுத்துறை சரியாக கணிக்க தவறியதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது,தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது

சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிடாது.திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,சர்வதேச அளவில் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது

நிலம் அளவிடும் பணி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது, இதற்கான அறிக்கையை முதல்வரை சந்தித்து அளித்துவிட்டு அவரது ஒப்புதலுடன் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிக்கு மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.விமான நிலையம் நிலையில் உலக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்

கன்னியாகுமரியில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை அதிகரிக்க தனியார் நிறுவனங்களை அணுகி தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரை பகுதியில் கேலரி உள்ளிட்ட அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.என தெரிவித்தார்.காங்கிரஸ் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது நாட்டில் குடியேறிய மக்களுக்கு தேவையான திட்டங்களை,கல்வி போன்ற அடிப்படை விசயங்களை செய்து கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது ஆனால் தற்போது மக்களை பயமுறுத்தும் நோக்கில் தற்போது சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!