May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

போர்களத்தில் படைத் தலைவன் போல நிற்கிறார் தமிழக முதல்வர் -கல்வியாளர் இராஜசேகரன்

நச்சு கிரிமியை வெல்லும் போர்களத்தில் படைத் தலைவனாக நின்றார் மக்கள் மனங்களை வென்றார் ! நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-கல்வியாளர் இராஜசேகரன்

இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் திரவங்கள் வழியாக பரவி வந்த கொரனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்காற்று பட்டாலோ அல்லது பேசும்போது அருகில் இருந்தாலே தொற்றிக்கொள்ளும் என அமெரிக்க நேஷனல் சயின்ஸ் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. தமிழக மக்கள் தற்காப்பை உறுதிப்படுத்த தமிழகமெங்கும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரானா சோதனை ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உயிர்காக்க ஊரடங்கு அறிவித்த கையோடு கனல் தெறிக்க களமாடுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடியார்.

அடையாளப்படுத்திய முதல்வர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் கிடைத்த முதலமைச்சர் வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்தி வெற்றிக்கொடியை உயர்த்தி பிடிக்க தொடங்கிவிட்டார் . உள்ளீடற்ற பகட்டான செயல் இல்லாமல் பம்பரமாய் சுழன்று வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரின் பங்களிக்கும் பாங்கு செய்தியாளர்களை  மெய்சிலிர்கவைக்கிறது..தெளிவான மனநிலையோடு அலட்டல் – அலங்கார வார்த்தையின்றி எதார்த்தமாக பதில் தந்து ஆச்சரியத்துடன் அசத்துகிறார்.

அசரவைக்கும் அறிவிப்புகள்

எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் மசோத தாக்கல் செய்வதிலும் அரசாணை வெளியிட்டு செயல்படுத்துவதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அய்யாவுக்கு கௌரவம்

எங்கள் சின்ன அய்யா சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டு, திருச்செந்தூரில் மண்பத்தை ஓராண்டில் கட்டி முடித்து தமிழகமே வியக்கும் வண்ணம் விழா எடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் எங்கள் சின்ன அய்யா சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அமர்களப்படுத்தி விட்டார் .

டெல்டா பாதுகாப்பு

நெற்களஞ்சியமாக காட்சியளித்த டெல்டா பகுதிகளை , மக்களை அச்சுறுத்தும் அபாய நச்சுத்திட்ட தொடர் அறிவிப்புகளால் , பாலைவனமாக மாறிக்கொண்டிருந்ததால் வேதனையில் திளைத்த விவசாய குடிகளுக்கு முதலமைச்சரின் வேளாண் மண்டல பாதுகாப்பு அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்தது.

மருத்துவ படிப்புக்கு உள்ஒதுக்கீடு

தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உள்ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த கல்விஆண்டிலேயே ஆணையத்தின் பரிந்துரைப்படி உள்ஒதுக்கீடு நடைபெரும் என்று அறிவித்து கிராமத்து மாணவர்களின் மருத்துவ படிப்புக் கனவை நினைவாக்கினார் வெளிமாநிலத்தவர் எவரும்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணய பணி நியமனங்களில் இடம்பெறக்கூடாது என்ற ஒட்டுமொத்த தமிழர்களின் குரலுக்கு செவிசாய்த்து , செயலாக்க வழிமுறைகளை முன்னெடுக்க தொடங்கி விட்டார் மாநிலங்களுக்குள்ளான பயணத்திட்டத்தில் விமானப்பயணத்தை தவிர்த்து மாவட்டவாரியாக மக்களை சந்திக்க தொடங்கி விட்டார். செல்லும் வழிகளில் விளைநிலங்களில் இறங்கி கழநியில் உழவனோடு நடவுக்கான நாற்றை கையில் எடுத்தாலும் , முண்டாசு கட்டி டிராக்டரில் கை உயர்த்தி நின்றாலும் எங்கள் வீட்டு விவசாயியாக தோற்றம் தருகிறது அவரது உடல் கட்டும் முக அமைப்பும்.

போர் கால கொரானா பணிகள்

எட்டரை கோடி தமிழர்களில் பெரும்பாலோர் இயற்கையான , யதார்த்தமான சந்தோசத்தை இழந்து தவிக்கும் நிலையில் பள்ளிகளை மூடி ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி தேர்சியை அறிவித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தார் . பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மனிக்கும். +2 தேர்வுகள் எந்த சூழ்நிலையிலும் தள்ளிப் போய்விடக் கூடாது என்பதில் தீர்கமாய் நின்றார்.

கடினமில்லா கனிவு

ஆட்சி ,அதிகாரம் என்ற இடைவெளியை தவிர்த்து அமைச்சர்கள் – போர்களத்தில் பிரதானமாக பணியில் இருக்கும் மருத்துவம், காவல், வருவாய்துறை கட்டமைப்பின் முன்னோடிகளை கடினமில்லாமல் கனிவாக வழிநடத்துகிறார். தனிமனித ஆளுமையை சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கிறார். அனைத்து துறை செயலர்களுடன் நேரடி துரித பங்களிப்பில் விவேகத்துடன் களம் காணுகிறார். அம்மா உணவகத்தை அடிக்கடி ஆய்வு செய்வதும் அடித்தட்டு மக்களோடு மக்களில் ஒருவராய் ஆனந்தமாய் உண்டு மகிழ்வதும் சூடான தலைப்பாக மாநிலத்தின் கடைசி மனிதன் வரை வைரலாகி வருகிறது.

பொலிவிழந்த முகங்கள்

கடமையையும் தாண்டி சேவையை நிலைநிறுத்தி கட்டுக்குள் இருந்த வைரஸ் தொற்று டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களால் மூன்று உயிர் பலியோடு 485 பேருக்கு உள்வட்ட பரவலால் தொற்று உறுதிசெய்யப்பட்டது அதிர்சியைதந்துள்ளது . இரவுபகல் தூக்கமின்றி ஒட்டுமொத்த அரசு எந்திரமும் போர்க்களத்தில் நிற்பதால் முகங்கள் வாட்டத்துடன் காணப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் ,சுகாதாரத்துறை செயலர் , பேரிடர் மேலாண்மைக செயலர் , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சியர்கள்கள் மிகுந்த சோர்வுடன் பொலிவின்றி முகங்கள் காட்சியளிக்கின்றன. அதில் நம் முதலமைசர் முகமும் தப்பவில்லை.

தனி ஆளுமையால் போர்படைத்தலைவனாக

மக்களால்  அடையாளம் காணப்பட்ட முதலமைச்சரை
கரவொலி எழுப்பி வாழ்த்துவோம்.

தற்காலிக உயிரியல் போரை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்திரத்தோடு அணி வகுப்போம்....

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன்.கல்வியாளர்,சமூக ஆர்வலர் , மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட பண்பாளர்

About Author

error: Content is protected !!