May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

போதையில் பிணத்தின் கையை சமைத்து சாப்பிட்ட ஆசாமி

போதையில் பிணத்தின் கையை சமைத்து சாப்பிட்ட ஆசாமி!
உத்தரப்பிரதேசத்தில் வேகாமல் கிடந்த பிணத்தின் கையை ஒருவர் சமைத்து சாப்பிட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் என்பவர் குடிப்பதையே வழக்கமாக கொண்டவர். குடித்துவிட்டு அக்கம்பக்கத்தில் சண்டையும் போடுவார்.
இந்நிலையில் சஞ்சய்யின் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். குடித்துவிட்டு போதை தலைக்கேறி இரவு உணவு சமைக்க சென்றுள்ளார் சஞ்சய்.
வீட்டிற்கு வந்த சஞ்சய்யின் மனைவி கணவர் சமைத்த உணவை சாப்பிட்ட போதுதான் அது சுடுகாட்டில் பாதி வேகாமல் கிடந்த பிணத்தின் கை என தெரியவந்தது. இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவர அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் பதற வைக்கும் தகவல் வெளியானது.
நன்றாக மது அருந்திய அவர், கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்த அழைத்து சென்றனர்.

மஹிமா

About Author

error: Content is protected !!