May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி மாநகராட்சி பொருட்காட்சி திடலில்செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் நடத்தப்படவுள்ள அரசுப் பொருட்காட்சிக்காக,அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ்,இ.ஆ.ப., இன்று (17.06.2019) நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வுசெய்து , பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆண்டுதோறும் 6 மாவட்ட தலைநகரங்களில் தலா 45 நாட்கள் சுழற்சி முறையில் அரசின் சாதனைகளை, திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 22.06.2019அன்று தொடங்கவுள்ள பொருட்காட்சிக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசுப் பொருட்காட்சியில் காவல் துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை,தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர்
கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, மாற்றுத்திறனாளிகள்நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,மீன்வளத்துறை உள்பட அரசுத் துறைகளும், பேரூராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,
ஆவின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,திருநெல்வேலி மாநகராட்சி என அரசு சார்பு
நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், அரசுப் பொருட்காட்சியினை கண்டு களித்திடும் வகையில் சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கிற்கான ராட்சத ராட்டினங்கள், மற்றும் தனியார்
உணவகங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.அரசுப் பொருட்காட்சியின் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திடசம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இப்பொருட்காட்சியில் அரசின் சார்பில் 27 அரசுத் துறை அரங்குகளும், 5 பிற துறைகளில்அரங்குகளும் அமைத்து நடத்திட உள்ளார்கள். அரசுப் பொருட்காட்சி நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15/-ம், சிறியவர்களுக்கு ரூ.10/-ம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்குரூ.5/- வசூலிக்க உள்ளார்கள்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,திருநெல்வேலி சார் ஆட்சியர் மரு.மணீஷ் நாராணவரே,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.செந்தில் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.

About Author

error: Content is protected !!