May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொங்கல் சிறப்பு ரயில்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் நாளை முதல் தொடங்குகிறது. மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்னை – நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லையில் இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இந்த தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் 12-ம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.

நெல்லையில் 18-ந்தேதி இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

நாகர்கோவிலில் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.
தாம்பரத்தில் 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறு நாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!