February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பேரா. அன்பழகன் மறைவு பாஜக நயினார் நாகேந்திரன் இரங்கல்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்

தமிழ்நாட்டில் மிக மூத்த திராவிட தலைவர்களில் ஒருவரும் எல்லா தலைவர்களாலும்,பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரை இழந்து வாடும் திமுகவிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது சார்பிலும் நான் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட இயக்கத் தலைவர்களில் முதுபெரும் தலைவராக விளங்கிய பேராசிரியர் அவர்கள் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் அவரது இலட்சிய பயணத்தில் இறுதிவரையிலும் நிறம் மாறாத பூக்கள் ஆக மனம் குன்றாத மலராக இறுதிவரையிலும் கலைஞர் அவர்களுக்கு துணையாக ஒரு லட்சிய வாதியாக செயல்பட்டார். தனது 9 முறை சட்டமன்ற அரசியல் வரலாற்றில் சட்டமன்றத்தில் யாருடைய மனமும் புண்படாதவாறு ஆணித்தரமாக அதே நேரத்தில் அமைதியான முறையில் தன்னுடைய வாதங்களுக்கு எதிர்வாதங்கள் மூலம் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!