February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பேராசிரியர் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும் கேப்டன் புகழஞ்சலி

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர்-பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர்.அன்பழகன்
மறைவிற்கு இரங்கல் செய்தி ஒன்றை வெளியட்டுள்ளார் அதில்

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், திமுக பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவரும், பன்முகத் திறமை கொண்டவருமான திரு பேராசிரியர். க. அன்பழகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவரின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!