May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பேராசிரியர் அனைத்து அரசியல் தலைவர்களாலும் நேசிக்கப்பட்ட பண்பாளர் சரத்குமார் புகழஞ்சலி

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு குறித்துஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் செய்தி ஒன்றை வெளியட்டுள்ளார் அதில்

திமுகவில் 43 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1971 முதல் திமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சரவை பொறுப்பில் இருந்தவருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அக்கொள்கைகளில் இருந்து சற்றும் பின்வாங்காமல் அமைதியாகவும், ஆழமாகவும் தனது கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதியோடு கரம்கோர்த்து திமுகவின் வளர்ச்சிக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர் பேராசிரியர்.

அரசியல் உலகில் எந்தவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளாகமால், கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களாலும் நேசிக்கப்பட்ட ஒரு கண்ணியமிக்க அரசியல்வாதிகளுள் ஒருவராக திகழ்ந்த நற்பண்பாளர்.

அவரது இழப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும், குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்

About Author

error: Content is protected !!