February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புள்ளிமானை வேட்டையாடிய 6 பேர் கைது

புளியங்குடி பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 6 எதிரிகளுக்கு
ரூ.2,70,000 இணக்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது,
மாவட்ட வனஅலுவலர் மற்றும் வனஉயிரின காப்பாளர் திருமால் இ.வ.ப அவர்களது உத்தரவுப்படி சங்கரன்கோவில் (இருப்பு) புளியங்குடி வனச்சரக அலுவலர் P.K.ஸ்டாலின் தலைமையில் புளியங்குடி பிரிவு வனவர் .அசோக்குமார், வனக்காப்பாளர்கள் திருமதி.பாரதி, திரு.கோபிநாத், முத்துராமலிங்கம், கந்தசாமி,மகாதேவன்பாண்டியன் வனக்காவலர் .யோபுராஜா மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கொண்ட தனிக்குழுவினர் 05.01.2020 அதிகாலை டி.என்.புதுக்குடி பிட் பவுண்டரியை ஒட்டியுள்ள பகுதிகளில் ரோந்து பணி சென்றபோது புளியங்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாத்துரை மகன் கருப்பசாமி, மூர்த்தி மகன் ராகுல், முருகன் மகன் ராஜ், ரவி மகன் செல்வக்குமார், மாரியப்பன் மகன் அலெக்ஸ்பாண்டியன், மற்றும் சுப்பிரமணியாபுரத்தை சேர்ந்த ராமர் மகன் அரிபிரசாத் ஆகிய ஆறுபேரும் சேர்ந்து டி.என்.புதுக்குடி அருகே உள்ள பட்டா நிலத்தில் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்தை ஒப்புக்கொண்டதின்பேரில் கைது செய்யப்பட்டு 6 எதிரிகள் மீதும் வனக்குற்ற வழக்கு பதிவு செய்து மாவட்ட வனஅலுவலர் அவர்களின் உத்தரவுப்படி 6 எதிரிகளுக்கும் தலா ரூபாய் 45,000வீதம் மொத்தம் ரூ.2,70,000 இணக்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
”வனஉயிரினங்களை வேட்டையாடுவது வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9-ன்படி குற்றமாகும். மேலும் வேட்டை நாய்களை கொண்டு முயல்களை வேட்டையாடும் நபர்களை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.

About Author

error: Content is protected !!