May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புளியங்குடியில் காணாமல் போன இளைஞர் குளத்தில் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் இடையன்குளம் 5ம் மண்டபம் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் குட்டி (25) என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவரை உறவினர்கள் தேடிய நிலையில் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் புளியங்குடி நாராயணப்பேரி குளத்தில் சடலம் ஒன்று கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி குளத்தில் நடுவில் உயிரிழந்த குட்டியின் சடலத்தை தீயனைப்பு துறையினரின் உதவியுடன் மீட்ட புளியங்குடி காவல் துறையினர் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலு‌ம் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து புளியங்குடி போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

About Author

error: Content is protected !!