May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புதிய தமிழகம் மற்றும் தாமரைத்தாய் அறக்கட்டளை ரூ1,00,000 நிதி வழங்கியது

புதிய தமிழகம் கட்சி மற்றும் தாமரைத்தாய் அறக்கட்டளை ரூ1,00,000 நிதி.

இந்திய நாடு இப்பொழுது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சூழலில் ஒவ்வொரு தனிநபருக்கும், நிறுவனங்களுக்கும் பல்வேறும் சிரமங்கள் இருக்கும் எனினும், 130 கோடி மக்களுடைய நலனை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் மட்டுமே துணை நின்றுவிட முடியாது. ஒவ்வொரு குடிமகனும் அவரவருக்கு இயன்ற அனைத்து வகையிலும் பங்களிப்பது மிக அவசியமாகும். கோரோனா தடுப்பு பணியில் புதிய தமிழகம் கட்சி துவக்கத்திலிருந்தே விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஏற்படுத்தி வருகிறது. இந்தியா இப்பொழுது எதிர்கொண்டுள்ள சூழ்நிலை மிகவும் அசாதரணமானதாகும். இச்சூழலை எதிர்கொள்ள மக்கள் தங்களால் முடிந்த அளவு நிவாரண நிதியளிக்க வேண்டுமென முதலமைச்சர் மற்றும் பிரதமர் கேட்டுகொண்டுள்ளார்கள்.

தேச நலனை கருத்தில் கொண்டு புதிய தமிழகம் கட்சி மற்றும் தாமரைத்தாய் அறக்கட்டளை – தாமரை வேர்ல்டு ஸ்கூல் சார்பாகவும், சங்கீதா மருத்துவமனை சார்பாகவும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 50,000-ம், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 50,000-ம் ஆக ரூ1,00,000 நிதியை  அந்தந்த வங்கி கணக்குகளில் இணையவழிப்பரிவர்த்தனை வழியாக அனுப்பி வைக்கபட்டது அதேபோல், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவு எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.என அறிக்கையில் தெரவித்துள்ளார்

About Author

error: Content is protected !!