June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புகைப்படப் போட்டி வாங்க ஜெயிக்கலாம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்களுக்கு ஓர் அழைப்பு
சர்வதேச சுற்றுலா தினம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அத்தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் “ நெல்லை மாவட்ட சுற்றுலா தளங்கள்” என்கிற தலைப்பில் புகைப்படப் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளன. அப்போட்டியில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள், கோயில்களின் புகைப்படங்கள், அழகிய சிற்பங்களின் புகைப்படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒருவர் மூன்று புகைப்படங்கள் வரை அனுப்பலாம்.புகைப்படங்களின் அளவு 12 X 18 ஆக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்களின் சொந்தப் படைப்புக்களை மட்டும் அனுப்ப வேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பம் உள்ள அனைவரும் தங்களின் படைப்புக்களை அனுப்பலாம். போட்டிக்கும் அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் அருங்காட்சியக இருப்பில் வைக்கப்படும் அவை திரும்ப தரப்படாது. சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுக்கும் நடுவராக மதன் கலைக்கூடம் மதன் சுந்தர் அவர்கள் பங்கேற்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியின் வெற்றியாளர்களுக்கு முதல்பரிசாக ரூ.2000, இரண்டாம் பரிசு ரூ.1500,மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.போட்டியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் தங்களின் படைப்புக்களை 20/09/2019 முதல் அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். படைப்புக்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 25/09/2019. படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி: காப்பாட்சியர் , அரசு அருங்காட்சியகம், எஸ்.பி அலுவலகம் அருகில், திருநெல்வேலி – 627002. செப்டம்பர் 27 ஆம் தேதி அருங்காட்சியகத்தில் நடைபெறும் நிகழ்வில் போட்டிக்கு அனுப்பப்பட்ட அனைத்துப் புகைப்படங்களின் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04622561915 என்கிற அருங்காட்சியக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்கிற தகவலை காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்

About Author

error: Content is protected !!