February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிரதமர் மோடிக்கு நெல்லை தெட்சணமாறநாடார் சங்கம் பாராட்டு

திருநெல்வேலி தெட்சணமாறநாடார் சங்க 53வது மகாசபை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார்.தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி ஆட்சிக்குழு மற்றும் கல்லூரிக்குழு தலைவர் வி.எஸ்.கணேசன் வரவேற்றார். சங்க செயலாளர் ஆர்.சண்முகவேல்ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஏ.செல்வராஜ் வரவு-செலவு கணக்குளை வாசித்தார்.
சங்க இயக்குனர் தங்கவேல, துணை செயலாளர்; ரத்தினராஜ், சென்னை கிளை சங்க சேர்மன் செல்வராஜ்நாடார், வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், செட்டிக்குளம் ராஜ் மற்றும் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள், மற்றும்  சங்க முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தெலுங்கானா ஆளுனரான நாடார் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜனை நியமனம் செய்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது, 2020ம் ஆண்டில் அனைத்து நாடார் சங்கங்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தெட்சணமாறநாடார் சங்கத்தின் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன்  ஆயுள்கால அடையாள அட்டை வழங்கினார். முடிவில் சங்க  துணைத்தலைவர் டி.முருகேசபாண்டியன்நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!