July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிரதமரின் விளக்கேற்றும் அறிவிப்பு வெளிச்சத்தை தரட்டும் -கல்வியாளர் இராஜசேகரன்

ஊரடங்கு வெற்றி பெற விளிம்புநிலை மக்களின் மூன்று வேளை உணவை அரசு உறுதிசெய்ய வேண்டும் !
மனிதாபிமானம் ,உடல் வலிமை ,விவேகம் ,உறுவிளைவிக்காத நம்பகத் தன்மையைத் தாண்டி பெருந்தொற்று இல்லாமல் உள்வட்டப் பரவலில் வீரியம் காட்டி வருகிறது கொரானோ வைரஸ்.


குழந்தை தடுப்பூசி
காசநோயை ஒழிக்கும் நோக்குடன் 1949ம் ஆண்டு முதல் இந்தியாவில் கட்டாய நடைமுறையில் உள்ள ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பிசிஜி தடுப்பூசி நம் தேசத்து மக்களின் உடலில் நல்ல எதிர்பு சக்தியை உருவாக்கி இருப்பதாக அமெரிக்கா ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய பன்னாட்டு கூட்டு நடவடிக்கு கட்டுப்படாத பிரிட்டன், இத்தாலி , அமெரிக்கா நாடுகளை சார்ந்த மக்களிடம் உடல் எதிப்பு சக்தியின்றி அவதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

வெப்பம் அதிகரிப்பு நமக்கு சாதகம்                                                                சர்வதேச மருத்து நிபுணர்களின் பார்வையில் இந்திய தட்பவெப்பநிலை 32 டிகிரிக்குமேல் தொடர்ந்து இருப்பதால் கொரனாவைரஸ் அதிக நாள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க எம்ஐடியின் துல்லிய தகவல் 5 வாரங்களுக்கு மேல் இந்தியாவுக்கு ஊரடங்கு தேவைப்படாதாது என்று அடித்துச் சொல்கிறது..மருத்துவர்களாலும் மக்களாலும் வைரஸ் தொற்றுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் பருத்தி துணிகளாலான முக கவசத்தால் எந்தப் பயனும் இல்லை.. N- 95 ரக முகக் கவசங்கள் மட்டுமே கொரானா வைரஸ்க்கு பாதுகாப்பானவை . களப்பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கே N – 95 முக கவசங்கள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்கின்றனர் மருந்துவர்கள்..

சுய தனிமைக்கு மக்கள் ஆட்படவில்லை.
உத்திரவாதமில்லா வருவாயும், முறைசாரா பணியும், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் கட்டுக்கடங்கா செயலும் சுய தனிமைக்கு சவால்விட்டுக்கொண்டு இருக்கிறது.. மத்திய அரசின் கடும் உத்தரவுகளினால் தமிழக அரசின் மிகக்கூர்மையான அணுகுமுறை மருத்துவப் பணியை மகாத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது .கடும்கோபத்திலும் கட்டுக்கடங்காத மக்களால் களபேரத்தில் தமிழக காவல்த்துறை தத்தளிக்கிறது. உத்திரவாதமற்ற வருவாய் சிக்கலால் , நிலை குலைந்த வாழ்வாதாரம் தினக்கூலிகள் ,கைவண்டி இழுப்போர், ஆட்டோ ஓட்டுநர்கள் ,சலவைத்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் , வீட்டு வேலை செய்வோர் , கட்டுமான தொழிலாளர்கள் என விளிம்புநிலையில் உள்ள வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாத மக்கள் அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்துவிட்டனர் . ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மூன்று வேளை உணவை அரசு உறுதி செய்தால் மட்டுமே ஊரடங்கின் நோக்கம் வெற்றி பெரும் . இல்லையெனில் நிலமை இன்னும் மோசமானால் பயன்படுத்த நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி ,கல்லூரிகளின் விடுதிகளின் அறைகள் மற்றும் படுக்கை வசதிகளை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதற்கான தேவை ஏற்பட்டுவிடும் .

பாதுகாப்பான சிகிச்சை
கொரானா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ( 3 – 4 – 2020 ) வரை 411 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 28 நாட்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டுடன் தனிமை சிகிச்சை தேவைப்படுகிறது..மருத்துவ பணியாளர்களுக்கு தொற்று பரவாமலிருக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து உணவுகள் வழங்க முதல் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது..மிக உன்னதமாக, விரிவாக மருத்துவ பணிகளை அரசு கையாளுவதால் ஒருவர் கூட தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் தனிமை வார்டுகளில் சிகிச்சையில் உள்ளனர்.. ஒரு உயிர் இழப்பை அரசு ஏற்கனவே சந்தித்துவிட்டதால் மற்ற உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது . கவனமாகவும் அதே நேரத்தில் மிகக்கடுமையாக பணியாற்றுங்கள் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

உள்வட்ட பரவல்                                                                                                                போர்க்கால அடிப்படை துரித பணிகளும் தமிழக மக்களின் உயர் வலிமை எதிர்பு சக்தியும் வைரஸின் உள் வட்ட பரவலோடு நிலைகொண்டுள்ளது..    டெல்லி கூட்டத்துக்கு  சென்று தமிழகம் திரும்பியவர்களின்  இன்றும்  சிலர் தானாக  முன்வந்து  தனிமைப்படுத்திக்  கொள்ள முன்வராததால் அரசின்  அசூர  பணியை  பின்னுக்குத்  தள்ளி  பெருந்தொற்றாக மாறிவிடுமோ  என  மருத்துவர்களும்  கொரான வைரசின் கொலை வெறியை அ றிந்த மக்களும் அதிர்சியில் உறைந்துள்ளனர்.
கொரோனா இருளில் தத்தளிக்கும் தேசத்து மக்களின் பிரார்த்தனையும் ,பாரதப்பிரதமரின் விளக்கேற்றும் அறிவிப்பும் வெளிச்சத்தை தரட்டும்.

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன் கல்வியாளர்,சமூக ஆர்வலர் ,மனிதவள மேம்பட்டு ஆலோசகர் என பன்முகம் கொண்டவர்

 

About Author

error: Content is protected !!