February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னி மலை அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் 6 மணிக்கு கொடியேற்றம், தீபாராதனை, 10 மணிக்கு யாகசாலை பூஜை, 12 மணிக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

நவம்பர் மாதம் 1 ம் தேதி காலை முதல் இரவு வரை மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சாயரட்சை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
அதை தொடர்ந்து வருகிற நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை சூரசம்காரம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் 12.30 வரை கும்பஜெபம், மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும், மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது, இரவு 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, அபிஷேகம் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தினர் செய்துள்ளனர்.

மறுநாள் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது, அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

About Author

error: Content is protected !!