May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வென்னிமலை முருகன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையுடன் பாலாபிசேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெற்றது.
திருவிழா தொடர்ந்து பிப்.20ஆம் தேதி வரை தினந்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் நடைபெறுகிறது. . திருவிழாவிற்கான எற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Attachments area

About Author

error: Content is protected !!