June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா துவக்கம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா
ஞாயிற்றுக்கிழமை (பிப்.10) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து பிப்.20 வரை 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மற்றும் பாலாபிசேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும், இரண்டாம் நாள் திருவிழா சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், மூன்றாம் நாள் திருவிழா தேவர் சமுதாயம் சார்பிலும், நான்காம் நாள் திருவிழா யாதவர் சமுதாயம் சார்பிலும், ஐந்தாம் நாள் திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பிலும், ஆறாம் நாள் திருவிழா அரிசன சமுதாயம் சார்பிலும், ஏழாம் நாள் திருவிழா விஸ்வகர்மா சமுதாயம் சார்பிலும், எட்டாம் நாள் திருவிழா செங்குந்த முதலியார் சமுதாயம் சார்பிலும், ஒன்பதாம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பிலும், பத்தாம் நாள் திருவிழா நாடார் சமுதாயம் சார்பிலும், பதினோராம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.
10ம் நாள் திருநாளான பிப்.19 அன்று காலை கீழப்பாவூர் சிவன்கோயில், பனையடிப்பட்டி, குறும்பலாப்பேரி, செட்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது. நிறைவு நாளான பிப்.20 அன்று கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைத்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பரகாட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.திருவிழாக்களின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவுகள் இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது .
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

About Author

You may have missed

error: Content is protected !!