May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாஅக்.28ல்  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நவ.1ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணிக்கு மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, பகல் 12.05 மணிக்கு அபிசேகம், உச்சிகாலபூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது
6ஆம் திருநாளான இன்று காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஸ்டி ஹோமம், தீபாராதனை, மலை 3 மணிக்கு யாகசாலை பூஜை, ஹோமம் நடைபெற்றது   தொடர்ந்து  சூரசம்ஹாரம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை  காலை 8 மணிக்கு அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், மாலை 6 மணிக்கு மாலை மாற்றுதல், இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

About Author

error: Content is protected !!