June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் கோயிலில் விளக்கு பூஜை

பாவூர்சத்திரம் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நேற்று தொடங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
கொடை விழாவின் முதல் நாளான நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன்  அபிஷேகங்கள்,  தீபாராதனையும், இரவு 7 மணிக்கு 306 திருவிளக்கு பூஜையும் நடந்தது.

வருகிற அக். 1ம்  காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 10 மணிக்கு குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், பகல் 12 மணிக்கு  தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 207 முளைப்பாரி ஊர்வலமும் நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான வருகிற அக்.2ம் தேதி பகல் 11 மணிக்கு பொங்கல் வழிபாடும், 12 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, தீர்த்தவாரி, எண்ணெய் காப்பு, பிற்பகல் 2 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு  கரைத்தலும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவிற்கு ஏற்பாடுகளை ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் வரிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

About Author

You may have missed

error: Content is protected !!