May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் காராமணி பயிர் விலை உயர்வு

பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு கீழப்பாவூர், அடைக்கலப்பட்டணம், கரும்பனூர், ஆண்டிப்பட்டி, சென்னெல்தாபுதுக்குளம், பெத்தநாடார்பட்டி, மகிழ், கரிசல்பட்டி மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய தென்பகுதிகளில் ஏராளமான தோட்டங்களில் காரமணி பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் காரமணியை விற்பனைக்காக பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு விற்கப்படும் காரமணியை கேரளா மாநிலம் கொல்லம், புனலூர், கொட்டாரக்கரை, திருச்சூர், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா போன்ற பல பகுதிகளில் இருக்கும் காய்கறி மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். காரமணி கேரளா மாநிலத்தில் உள்ளவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். எனவே கேரளாவிற்கு அதிமாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 4 முதல்10 டன் வரை பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால்
கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் 15 வரை விற்பனையானது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்காக பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு
2 டன்னுக்கு குறைவாக காரமணி விற்பனைக்கு வந்தது.
வரத்து குறைவாலும் கேரள வியாபாரிகள் காராமணி பயிரை தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்ததால் விற்பனையில் ஏற்றம் காணப்பட்டு கிலோ ஒன்றுக்கு 25 முதல் 35 வரை விற்பனையானது.
இந்த விலையால் காராமணி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

About Author

error: Content is protected !!