June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பாவூர்சத்திரம் M.S.P.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
Brakes India Private Limited,  நிறுவனமனித வள மேம்பாட்டுத்துறை  மேலாளர் ஹரிபிரசாத், துணை மேலாளர்கள் பழனி, மதன், உதவி மேலாளர்கள் ராம் பிரசாத், கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை அலுவலர் சவுரிராஜன், துணை அலுவலர் மகாதேவன் ஆகியோர் மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்தனர். நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 155 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ‘
தேர்வுபெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் M.S.P.V.காளியப்பன், ஆலோசகர்
D. பாலசுப்பிரமணியன், முதல்வர் G.ரமேஷ், அனைத்துத் துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்
நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

You may have missed

error: Content is protected !!