May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்  மோதியதில் 10 பேர் காயம் ஒருவர் பலி

செங்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் நாராயணன் வயது 40 இவர் தனது உறவினர்களுடன் அம்பாசமுத்திரத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வேனில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அம்பை தென்காசி ரோடு எல்லைப்புள்ளி விலக்கு அருகே வந்தபோது எதிரே அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மோதியது இதில் வேன் ஓட்டி வந்த டிரைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்
 உடனடியாக அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேஷ் (வயது 55 )என்பவர் பலியானார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

error: Content is protected !!