June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரத்தில் திருமண வரவேற்பில் வெடி வெடித்தபோது தீ விபத்து

பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் பாவூர்சத்திரம் மற்றும் தென்காசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாண்டியன் தந்தை செல்லத்துரையுடன் கடையை கவனித்து வருகிறார். நேற்று அருகில் உள்ள ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து நேற்று மாலையில் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி முடிந்ததும் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்பொழுது பட்டாசு வெடித்து சிதறியதில்  திருமண வரவேற்புக்கு போடபட்டு இருந்த பந்தலில் தீ பிடித்து எரிந்தது. அத்துடன் அங்கிருந்த   அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து அனைத்தனர்.  இதனால் பாவூர்சத்திரம் பகுதியில் அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தங்களது வீட்டு நிகழ்வின்போது தீ விபத்து ஏற்பட்டு விட்டதே என்று திருமண வீட்டார் கலங்கி நின்றது பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது ,பலர் ஆர்வ கோளாரில் வெடி வெடிக்க பிறருக்கு சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது

About Author

You may have missed

error: Content is protected !!