June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பால் முகவர்களுக்கு அங்கீகாரம் வழங்க பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

மழையோ ,புயலோ , சுனாமியோ எது நடந்தாலும் நமக்கு காலையில் ஒரு காபியோ டீயோ குடிக்கணும் .,  நம்ம கூட எதுவும் குடிக்காமல் இருந்திடலாம் ஆனால் குழந்தைகள் பாடு ரொம்ப கஷ்டம் கொஞ்சம் பால் வர கொஞ்சம் லேட் ஆனாலும் என்னாச்சு கொஞ்சம் பாருங்க பால் வரல என பெண்கள் பாடாய் படுத்தி எடுத்துவிடுவார்கள் ,

⇓பால் சப்ளை செய்யும் டெலிவரி பாய் இரவு எப்போ தூங்குவார் எனத் தெரியாது ஆனால் காலையில்  4 மணிக்கெல்லாம் லைனுக்கு கிளம்பி ஆகணும் , இதைவிடவும்  மொத்தமாக பால் பாக்கெட்  வரும் அதை இறக்கி வைத்து  விட்டு  அதை ஏரியா வாரியாக பிரித்து வைத்து  அய்யோய்யோ சொல்லி மாளாது

அதிலும்  கடை வாசலில் இவர்கள் கொண்டு வைக்கும் பால் பாக்கெட்டை திருட ஒரு கூட்டம்  இதையெல்லாம் கடந்து தான் நம்மை வந்து அடைகிறது ஆனால் அவர்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லாமல் இருகின்றனர் ,உயிரை துச்சமென நினைத்து செயலாற்றும் எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்க என கோரிக்கை எழுந்துள்ளது 

இது குறித்து  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம். சார்பில் நிறுவனர் மாநில தலைவர்.பொன்னுசாமி,பொதுச்செயலாளர் பொன்மாரியப்பன்,மாநில பொருளாளர் .காமராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

  • உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கண்விழித்து, மழை, வெள்ளம், பனி என எந்த ஒரு சூழ்நிலையிலும் இடையறாது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்திலும், விநியோகத்திலும் சுமார் 1.5லட்சத்திற்கும் மேற்பட்ட பால் முகவர்கள் தன்னலம் கருதாமல் ஈடுபட்டு வருகிறோம்.

இது வரை மக்களை கொத்துக், கொத்தாக சுருட்டிச் சென்ற சுனாமியின் போதும், இயற்கையே ருத்ரதாண்டவமாடி தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்ட “தானே”, “வர்தா”, “கஜா”, புயல்களின் போதும், மாட மாளிகைகளில் வசித்தவர்களை கூட ஒருவேளை உணவிற்காக சாலைகளில் கொண்டு வந்து நிறுத்திய வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் போதும், அரசியல் கட்சிகள் முழு கடையடைப்பு நடத்திய காலங்களிலும் எங்களைப் பற்றியோ, எங்களது குடும்பத்தினர் பற்றியோ கிஞ்சித்தும் கவலை கொள்ளாது மக்களுக்கு பால் தங்குதடையின்றி கிடைத்திட வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையிலேயே செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தற்போது உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் “கொரானா வைரஸ்” பாதிப்பில் இருந்து மக்களை தற்காத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சமயத்தில் கூட மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எங்களது உயிரை துச்சமென நினைத்து, கண்விழித்து “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்கிற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகமான மக்கள் நலப்பணியை செவ்வனே செய்து, அதில் முழுமையான மனநிறைவைக் கண்டு வரும் பால் முகவர்களுக்கு இதுவரை தமிழக அரசு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது எங்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது.

ஒட்டுமொத்த உலகமே இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தன்னலம் கருதாமல் செயல்பட்டு வரும் மருத்துவம், காவல்துறைக்கு அடுத்து மக்களுக்கு சிறப்பான முறையில் பணி செய்து வரும் பால் முகவர்களை அங்கீகரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு வழங்கி பாதுகாத்திட வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.என தங்கள் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்

About Author

error: Content is protected !!