May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு யாருக்கு ?

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கூட்டம்திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த  பாவூர்சத்திரத்தில் உள்ள லோட்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது ,
கூட்டத்திற்கு பாவூர்சத்திரம் தொழிலதிபர் எம். கே. வி. கே. பால்ராஜன் தலைமை வைத்தார். டி. ஆர். தங்க ராஜா வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் இரவு நேரங்களில் திறந்து வைக்க காவல்துறை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க ,பிளாஸ்டிக் தயாரிக்கும் ஆலை நிர்வாகங்கள் உடன் அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாக கூட்டம் விரைவில் நடத்தப்படும் உள்பட பல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்கிரமராஜா வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாநில நிர்வாக குழுவை ஆலோசித்த பிறகு யாருக்கு ஆதரவு என்பது தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் டி. பி. வி. வைகுண்டராஜன் இணைச்செயலாளர் நயன் சிங், பாவூர்சத்திரம் தொழிலதிபர் அன்பழகன், சுற்றுவட்டார அரிசி ஆலை உரிமையாளர்கள், இருசக்கர நான்கு சக்கர விற்பனை உரிமையாளர்கள், மற்றும் பலசரக்கு கடை , டீக்கடை உரிமையாளர்கள் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு விக்கிரமராஜா  நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

About Author

You may have missed

error: Content is protected !!