February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பவ்டா நிறுவனம் சார்பில் 35லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள் கட்டளைகுடியிருப்பில்காந்திஜெயந்தியை முன்னிட்டு பவ்டா நிறுவனம் சார்பில் 35லட்சம்மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நடைபெற்றது .
செங்கோட்டை அடுத்துள்ள கட்டளைகுடியிருப்பு பேரூந்து நிறுத்தம்அருகில் வைத்து பவ்டா நிறுவனத்தின் 35வது துவக்க விழா மற்றும்காந்திஜெயந்தியை முன்னிட்டு 35லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது . துவக்கமாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மழைப்பாட்டு பாடி விழா துவங்கியது.
விழாவிற்கு  பவ்டா குழும நிறுவனர் டாக்டர் ஜாஸ்லீன்தம்பதலைமைதாங்கினார். செங்கோட்டை மண்டல பவ்டா உதவிப்பொதுமேலாளர் அழகுமுருகன் வரவேற்று பேசினார்.
செங்கோட்டை வேளாண்மைத்துறை வேளாண் அதிகாரிஷேக்முகைதீன்,கட்டளைகுடியிருப்பு ஊராட்சி மன்ற முன்னாள்தலைவர் சேகர், தினபூமிபாலசுப்பிரமணியன், கருவூலத்துறைஅலுவலர் செந்தில், பவ்டா உதவிப்பொது மேலாளர் ஹைக்கோர்ட்ராஜாநுாலகா்ராமசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அதனைதொடர்ந்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள கோவில்
வளாகத்தில் பவ்டா நிறுவனம் சார்பில் மரக்கன்றுகளை  நட்டு துவக்கிவைக்கப்பட்டது.;வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, மற்றும்கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறப்புஅழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கார்த்திகைராஜன், வருவாய் ஆய்வாளர்முத்துக்குமார், ஊராட்சி மன்ற செயலர் பண்டாரம், பணிநிறைவு பெற்றதலைமைஆசிரியர் இளஞ்செழியன், ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிஇராமசாமி, கவிஞர் தளவைஇளங்குமரன், சமூக ஆர்வலர் நேசமணி,விழுதுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் ரமேஷ்;, கோமதிநாயகம்,
சண்முகையா, தங்கராஜ் ஆட்டோசங்க தலைவர் குமார் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட திராளனோர்கலந்து கொண்டனர்.
முடிவில் களப்பணியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!