May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பவாரியா கும்பலை அடியோடு அறுத்த சிங்கம் பணியில் இருந்து ஓய்வு

ஜுலை 31 தமிழக காவல்துறையில் இருந்து ஒரு தலைசிறந்த அதிகாரி ஓய்வு பெறுகிறார் சங்கர் ராம் ஜாங்கிட் என்பது இவரது முழுப்பெயர் ஜாங்கிட் பெயரைக் கேட்டால் பிரபல ரவுடிகளுக்கு மட்டுமல்ல பவாரியா கும்பலையே குலை நடுங்க செய்யும் ஜாங்கிட் ஐபிஎஸ்.இன்று ஓய்வு பெறுகிறார் அவர் முதன் முதலாகா நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.,யாக பணி அமர்த்தப்பட்டார் ,அதன் பின் அவரது சாம்ராஜியம் தமிழகம் எங்கும் விரியத்துவங்கியது இன்று அவர் வெளிட்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்

அன்புடையீர்

வணக்கம்

இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். இந்த காலகட்டத்தில் என்னுடன் பணியாற்றிய காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

குறிப்பாக
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தியது,

பவாரியா கும்பலை கண்டுபிடித்தது மற்றும் வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கையின் போதும் மிக முக்கியமான காலகட்டங்களில் கடுமையான சிரமங்களுக்கிடையிலும் என்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்றியதை நான் என்றும் மறவேன்..

என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு என்னுடன் இரவு பகலாக ஒத்துழைத்த, நீங்கள் அனைவரும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்..

நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

உங்களின் அன்புள்ள,
எஸ். ஆர். ஜாங்கிட் , ஐபிஎஸ்.

About Author

error: Content is protected !!