June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு குளித்துக் கொண்டிருந்த 17 இளைஞன் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் மாயம்

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தண்ணீர் அதிகரிப்பு காரணமாக ஐந்தருவியல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல் பழைய குற்றால அருவியில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் குடும்பத்துடன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளப்பெருக்கில் மரணம் அடைந்தார் . பாதுகாப்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்

About Author

error: Content is protected !!