May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பழைய குற்றாலம் கால்வாய் தூர்வாரும் பணி

கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்டகுளங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பழையகுற்றாலம் கால்வாய் தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை சிற்றாறு வடிநில கோட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழப்பாவூர் ஒன்றியத்தின் மேற்கு பகுதி குளங்களான வெள்ளப்பாறைகுளம், உப்பனாங்குளம், பெட்டைகுளம் அருதன் குளம், சென்பநாதபேரிகுளம், நல்லமாடன் புதுக்குளம், செங்குளம், பெட்டைகுளம், திருப்பணிகுளம், சென்னெல்தாகுளம், புதுக்குளம், ஆவரந்தாகுளம், பட்டிபத்துகுளம்,கைகண்டார்குளம், நாராயணப்பேரிகுளம், வெள்ளானன்புதுக்குளம், பத்மநாதபேரிகுளம் ஆகிய குளங்களுக்குபழைய குற்றால அருவியின் செங்குளம் கால்வாய், வைராவி கால்வாய் ஆகிய கால்வாய் மூலம் நீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டு சுமார் 5ஆயிரம் ஏககர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்தகால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரி சீரமைக்கப்படாததால் பழைய குற்றாலம் தண்ணீர் முறையாக இந்த குளங்களுக்கு வந்துசேரவில்லை.
இதனால் இந்த குளங்கள் நிரம்பாமல் தொடர்ந்து பலஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயமும் நடைபெறாமல், பொதுமக்கள் குடி நீருக்கும் திண்டாடும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பலஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜீலை 3ம் தேதி ஆவுடையானூரில் நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்ட விவசாயிகள் பங்களிப்புடன் கூடிய குடிமராமத்து பணிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பழையகுற்றாலம் கால்வாய் விவசாயிகள் சார்பில் பழைய குற்றாலம் கால்வாய் பகுதிகளை உடனடியாக தூர்வவாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குபதிலளித்த கலெக்டர் வரும் நாட்களில் இப்பணிகள் தொடங்க நடவடிக்ககை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பழைய குற்றாலம் கால்வாய்கள் பொதுப்பணி துறையினரால் தூர்வாரி சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர்மணிகண்ட ராஜன், உதவிபொறியாளர் தங்கஜெய்லானி, இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளர் இராம உதயசூரியன், பழைய குற்றாலம் பாசனவிவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் திருமலாபுரம் அப்பாத்துரை, அதிமுக சிவநாடானூர் ஊராட்சி செயலாளர் கதிரவன், கணபதி பாலசுப்பிரமணியன், ஜீவா, செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!