June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாணவிகளுக்கு போதையேற்றி பாலியல் தொந்தரவு -போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிகளை போதை ஏற்றி பாலியல் தொந்தரவு செய்த கும்பல் .ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வீட்டிற்கு மாலை நேரத்தில் சில நாட்களாக போதையில் வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியில் செல்போன் மற்றும் அதில் உள்ள எண்களை ஆராய்ந்து உள்ளனர். பின்னர் அந்த மாணவியை கொண்டு அந்த எண்ணில் உள்ள நபரை வரவைத்துள்ளனர். அந்த நபர் சொகுசு காரில் வந்துள்ளார். காரில் மேலும் சில பள்ளி மாணவிகள் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த நபரிடம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில் பல திடுகிடும் தகவல் கிடைத்துள்ளது. அந்த நபரின் பெயர் சேதுராஜ் என்றும் சங்கரன்கோவில் அருகே உள்ள அடை கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் கார் ஓட்டுனராக இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் சேதுராஜ் தனது நண்பன் மூலம் பள்ளி மாணவிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அவர்களை சொகுசு காரில் ஏற்றி பள்ளியில் கொண்டு விடுவது, மாலையில் சொகுசு காரில் ஏற்றி கொண்டு போதை வாஸ்துகளை கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது, பின்னர் வீட்டின் அருகே இறக்கி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரனையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்று இருக்கலாம் என்றும் அதிகளவில் பள்ளி மாணவிகள் பாதிபடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து சங்கரன் கோவில் காவல்துறையினர் ரகசிய விசாரனையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

error: Content is protected !!