May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பள்ளி மாணவர்களின் சிந்தனை சிதறாமல் செம்மைப்படுத்தும் வழிமுறைகள் -கல்வியாளர் இராஜசேகரன்

ஓடி ஆடி விளையாடும் பள்ளிச் சிறுவர்களை ஊரடங்கால் வீட்டில் சிறைபிடித்ததால் சிந்தனை சிதறாமல் செம்மைப்படுத்தும் வழிமுறைகள்! வழி காட்டுகிறார் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், கல்வியாளர் இராஜசேகரன்

உலக அளவில் 130 நாடுகளில் 142 கோடி பள்ளிக் குழந்தைகள் வீடுகளில் சிறைபிடிக்கப்பட்டவர்களாக அடங்கிக் கிடக்கிறார்கள். இது ஒட்டுமொத்த உலக குழந்தைகள் எண்ணிக்கையில் 80 சதவிதமாகும் .இவை அறிய நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு வருகிறது . ஆரம்பநிலையில் இருந்து 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு எழுதாமல் நேரடி தேர்ச்சி பெற்றவர்களோடு தமிழகத்தில் 1, 28, 55, 485 எண்ணிக்கையிலான ஓடி ஆடி விளையாடும் பள்ளிச் சிறுவர்களை ஊரடங்கால் வீட்டில் சிறைபிடித்ததால் சிந்தனை சிதறாமல் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

தாயின் குணமே பூவாய் மலரும்

கர்பம் தரித்த காலத்தில் தாயின் மனநிலையும் ,கால சூழலும் ரசனையும் ,பண்பும் உன்னதமாய் குழந்தையின் உயிருக்குள் ஊடுருவி விழுமிய பண்டுகளை கட்டமைக்கிறது . நல்ல விதையை இந்த பூமியில் ஊன்றிய பெருமையாக அவதரிக்கும் குழந்தை பெற்றோர்களின் குணாதிசியங்களோடு மண்ணில் தடம்பதிக்கிறது..

ஒழுக்க விழுமியங்களும் ,உயர் பண்புகளும் ,குடும்ப பாராம்பரியம் , பயின்ற பாடசாலைகளால் மாணவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சில தலைமுறைக்கு முன்பு போல் இல்லாமல் இந்த தலைமுறை பெற்றோர்கள் புதிய வாழ்வு ,புதிய தேடல் ,புதிய கணக்கோடு இருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது.

வாழ்வியல் வலைபின்னும் பள்ளிக்கூடங்கள்

குழந்தை பாடசாலைக்கு அடியெத்து வைத்ததிலிருந்து அதாவது 3 வயது முதல் 17 வயது வரை குருவி கூடுகட்ட ஒவ்வொரு தழையாக எடுத்து சரியான பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்து வலைபின்னுவதுபோல் தொடர்ந்து 14 ஆண்டுகள் வாழ்வியல் வலைபின்னும் பணிகள் பள்ளிகளில் நடைபெருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 275 நாட்கள் காலை முதல் மாலை வரை தினமும் 9 மணி நேரம் பள்ளியின் நேரடிப் திட்டமிடலில் ,ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் பயணிக்கிறார்கள் .பள்ளிப்பருவத்தில் அவதரிக்கும் அறச்சீற்றம், மார்க்க உணர்வு ,கல்விப் புலன் விரிவாக்கம் ,பன்முகப் பார்வை வலுப்பெறுதல் ,பேராளுமை நிலைப் பெறுவதை பள்ளிகளின் செயல்திட்டங்களும் ,ஆசிரியர்களின் ஆழமான அறிவும் பெற்றோர்களின் ஈடில்ல கவனஈர்ப்பும் ,இணையில் அரவணைப்பும் தீர்மானிக்கின்றன.

பள்ளிக் கல்வித் துறையின் பரபரப்பான அறிவிப்புகள்.

கடந்த ஆண்டின் இறுதியில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என அறிவித்து பிப்ரவரி 11ம் தேதி ரத்து செய்தது ,மார்ச் 12ம் தேதி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ,13ம் தேதி அறிவிப்பை நிறுத்திவைத்தது என பரபரப்பு தொற்றிய நேரத்தில் +2 பொதுத்தேர்வு எழுதுபவர்கள் தவிர அனைவருக்கும் விடுமுறை அரசு அறிவித்த தருணத்தில் நீண்ட ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு ஊரடங்கால் வீடுகளில் சிறைபிடிக்கப்பட்ட மாணவர்களை வீட்டில் இருந்தபடியே மன அழுத்தமின்றி ,செதுக்கி செம்மைப்படுத்த வழிவகைகளை காண்போம்..

அற்ப ஆயுள் கொண்ட கொரானா

உலகை ஏற்றதாழ்வின்றி அச்சுறுத்தும் கொரானா 30 நாளில் மடிந்துபோகும் அற்ப ஆயுள் கொண்ட வீரிய கிருமி . கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்கிறது என்பதை நினைவூட்டி குழந்தைகளை பெற்றோர்களோடு பிரார்த்தனை ,தியானம் ,தவம் ,உண்மை ,பக்தி ,உள்ளம் திருக்கேவில் என்பதை புரியவைக்கிறது. குழந்தைகளை அவர்களின் உள்ள உணர்வுகளை புரிந்து ரசனையோடு ரசிக்கின்ற தாய்க்கு எந்த நீண்ட ஊரடங்கும் தாக்குதலை தராது.


  1. கல்வி ஆசோகர் மாலதி பரிந்துரைகள்

சர்வதேச கல்வி ஆலோசகர் மாலதி பல நாடுகளுக்கு பயணிப்பவர் .பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நோடித் தொடர்பில் மாணவர்களின் திறன் மேம்பட தொடர் ஆலோசனை கூறுபவர் அவர் தரும் தகவல்கள் : இப்படிப்பட்ட சிரமமான காலங்களில் குழந்தைகள் மனதில் கவலை ,குழப்பம் ,வருத்தம் ,பயம் ,கோவம் ,மன அழுத்தம் ,இயற்கையாக இடம்பிடிக்கும். இதை தவிர்க்க ஏதாவது ஒரு செயலில் குழந்தைகளை ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் ஓவியம் தீட்டுதல் ,இசை மீட்டுதல் ,வரைபடமாதிரிகளை தயாரித்தல் ,சுகாதார பழக்க வழக்க பயிற்சி ,வாசிக்கும் வேகத்தை கூட்டும் பயிற்சி ,உதவும்மனப்பான்மை வளர்த்தல் ,நேர மேலாண்மை திட்டமிடல் , பணிகளை பட்டியலிடும் பழக்கம்,நீதிக்கதைகள் ,உலக வரைபடங்களின் நாடுகளை அடையாளப்படுத்தி தலைநகர்களை குறிக்கச் சொல்லலாம் .ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன சின்ன வேலைகளை கொடுத்து அதை வாட்சப்பில் படம்பிடித்து காண்பியுங்கள். அதில் உணவு பரிமாற்றம் ,சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைப்பது ,வீடுகளை சுத்தம் செய்வது ,துணிகளை மடித்து வைப்பது ,வீடுகளில் உள்ள பழைய புகைப்பட ஆல்பங்களை காண்பித்து உறவு முறையை விளக்கிச் சொல்லுஙவது என ஆனந்தமாக நாட்களை கடத்தலாம். நம் வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் வாழ்கை பாடமாக குழந்தைகளுக்கு பதிவு செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்

தண்டனை காலமல்ல – கற்பித்தல் காலம்

ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு 10 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் ஏப்ரல் 30 நாட்கள் கட்டுப்பாடுடன் முடிந்து வைரஸ் தாக்கம் தணிந்தாலும் மே மாதம் குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே இன்னும் கடக்க வேண்டிய 60 நாட்களும் குழந்தைகளின் மனதையும் உடலையும் காக்க வேண்டிய பொறுப்பை பெற்றோர்களுக்கு இயற்கைபணித்துள்ளது. வேளாண்மை பயிர்கள் பற்றிய புரிதல்கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளிடம் பயிர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி சாகுபடி காலம் ,விளைபொருட்களின் பயன்பாடு பற்றி தகவலை சொல்லிக்கொடுங்கள் அதை வரைபடமாக காட்சிப்படுத்தட்டும். இவை தவிர டிஜிட்டல் வடிவ கையடக்க கணினி கற்பித்தல் முறையில் பள்ளிப் பாடத்தையும் ஆன்லைன் மூலம் படிக்க வைக்கலாம் . அதில் சலிப்படையும்போது சிந்தனைகளை ,கற்பித்தல்களை மாற்றி ,அதற்கான பயிற்சி காலம் தண்டனை காலமல்ல – அகத்தாய்வு காலம் – அறிவியல் தவக்கலம் என்று தனிமையை அறிய வைத்து குழந்தைகளின் மனவலிமையை வார்த்தெடுப்போம்……

கல்வியாளர் ஜா..இராஜசேகரன்

About Author

You may have missed

error: Content is protected !!