May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்திரிகையாளர் தாக்குதல் போலீசுக்கு கண்டனம்

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்தில் செய்தியாளர் பாரதி கடுமையாக தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தமிழ் நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டணத்தை தெரிவிக்கிறது

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த பாரதி பாவூர் சத்திரத்திற்கு செய்தி எடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த சின்னத்துரை என்ற உதவி ஆய்வாளர் அவதூறாக பேசியும் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களை தரம் தாழ்த்தி பேசி உள்ளார் இது குறித்து செய்தியாளர் பாரதி உதவி ஆய்வாளரிடம் கேட்கவே எதிர்த்து பேசுகிறாயா? என்று செல்போன் பைக் சாவி உள்ளிட்டவற்றை பிடிங்கி பூட்ஸ் காலால் முகத்தில் எட்டி உதைத்து அடித்து இழுத்து சென்றுள்ளார் பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக செய்தியாளர் தாக்கி உள்ளார் இதற்கு சாட்சியாக நிலையத்தில்.உள்ள சி சி டிவி காட்சிகள் பதிவாகி உள்ளது இந்த கொடூர தாக்குதலை கண்டித்து தமிழ் நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம்.மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர் சங்கங்களும்ஒன்றிணைந்து காவல்துறைக்கு எதிரான கண்டணத்தை பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நியாயம் கேட்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது

About Author

You may have missed

error: Content is protected !!