May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்திரிகையாளர் ஓய்வூதியம் விதிமுறை தளர்த்த டியூஜே தீர்மானம்

பத்திரிகையாளர் ஓய்வூதியம் – விதிமுறைகளை தளர்த்த வேண்டும் இராணிப்பேட்டையில் நடைபெற்ற டியூஜே பேரவைக்கூடத்தில் தீர்மானம்

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்வழங்குவதில் உள்ள விதிமுறைகளை தளர்த்த
வேண்டும் என இராணிப்பேட்டையில் நடைபெற்ற டியூஜே பேரவைக்கூடத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ( டியூஜே) புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் பேரவைக்கூட்டம்
நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு,ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட த்தலைவர் இந்திரகுமார் தலைமை
தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் புருசோத்தமன் வரவேற்றார். சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்ட டி யு ஜெ மாநில் தலைவர் மாநிலத்தலைவர்
பி.எஸ்.டி. புருசோத்தமன்,சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு
நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக வாலாஜா எம்
புருஷோத்தமன்,செயலாளராக எம் ஏ பல்தசார், பொருளாளராக ஏ ஜி லிங்கேஷ்,
மாவட்ட துணை தலைவரகளாக ஆர் கிருஷ்ணமூர்த்தி,ஆர் நரசிம்மன்,கலவை
வெற்றிவீரன்,மாவட்ட துணை செயலாளர்களாக ஆர்
வெங்கடேசன்,ஜெ.புகழேந்தி,சோளிங்கர் அரங்கநாதன்,மாவட்ட செயற்குழு
உறுப்பினர்களாக எம் மகேஸ்வரன், ஏ சங்கர்நாராயணனன், வாலாஜா
ராமு,காவேரிப்பாக்கம் அன்பழகன்,பொன்னை முருகன், மாவட்ட தொடர்பு அலுவலராக
தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை மாநில துணைத்தலைவர் .சண்முக வேல், மாநில இணை செயலாளர்
கே.ஹென்றி லாசரஸ்மாநில அமைப்பு செயலாளர்கள் பி ஆர் சுப்பிரமணி,
கிருஸ்டோபர்,தமிழ்ச்செல்வன், நெல்லை மாவட்ட தலைவர் மனோகரன், சென்னை
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், உள்ளிட்டோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டையை
தலைமையிடமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு இக்கூட்டம்
நன்றியையும்,பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஓய்வு பெறும் பத்திரிகையாளர் களுக்கு பென்சன் தொகை வழங்க, அரசு விதிகளை
தளர்த்த வேண்டும், பணியின் போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு
வழங்கப்படும், குடும்ப நல ஊதியம் ரூ.3 லட்லசட்த்திலிருந்து, ரூ.5 லட்சமாக
உயர்த்தி வழங்கவேண்டும், குடும்ப ஊதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க
வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கம் அளிக்கும் சான்றிதழ் அடிப்படையில்
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுவதற்கான அரசு விதியாக உள்ள, குடும்ப ஒட்டுமொத்த ஆண்டு
வருமானம் ரூ.72 ஆயிரம் என உள்ளதை மாற்றி, விண்ணப்பிக்கும்
பத்திரிகையாளரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் என மாற்றியமைக்க
வேண்டும்.

இதேபோல், தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது, தாக்குதல் நடத்தப்டும்
சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஜெயா டிவி
செய்தியாளரை தாக்கிய அதிகாரி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்காததை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. பத்திரிகையாளர் பாதுகாப்பு
சட்டம் விரைவில் கொண்டு வரவேண்டும்,

மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் தாலுக்கா பத்திரிகையாளர் களுக்கு
வீட்டுமனைப்பட்டா மற்றும் பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும்,
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட து.

வேலூர் மாவட்டசெயலாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!