May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
அரசு மற்றும் ஆசிரியர் பணி நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நடத்த வேண்டும், என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் அமைப்பான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், குரூப்-4, குரூப்-2 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை கண்டு நாடே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடந்த தொழில்நுட்ப கல்வி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில், முறைகேடுகள் நடந்துள்ளதை அடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வை நடத்துவதற்கு ஏற்பாடு நடக்கிறது.
தற்போதைய சூழலில் அரசு பணி மற்றும் ஆசிரியர் பணி இடங்களுக்கு தேர்வு முறை என்பது முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. எனவே கடந்த காலங்களை போல ஆசிரியர் பணி நியமனங்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தால் ஒளிவு மறைவின்றி, முறைகேடின்றி ஊழல் இல்லாத பணி நியமனம் நடைபெறும்.
அந்த முறையில் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடித்து விட்டு பணி நியமனத்திற்கு காத்திருக்கும், 6 ஆயிரம் பட்டதாரிகளை முதல்கட்டமாக வரும் கல்வி ஆண்டில் பணி நியமனம் செய்ய வேண்டும் இதனை வலியுறுத்தி, ஏப்.27ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

error: Content is protected !!