May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பட்டாசு ஆலை வெடி மருந்துகள் பறிமுதல்.

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை – வெடி மருந்துகள் பறிமுதல்.

கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சி பைபாஸ் சாலை பகுதியில் ராமசுப்பு என்பவருடைய மகன் காளிராஜ். இவருடைய கட்டிடத்தில் சாத்தூர் பழைய டேக் ரோட்டினைச் சேர்ந்த மலையாண்டி மகன் மாதவன் (32) என்பவர் அட்டை கம்பெனி நடத்தப்போவதாக கூறி வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் தயாரிப்பு செய்யப்படுவதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் முருகனாந் தலைமையிலான குழுவினர் அந்த கட்டிடத்தில் ஆய்வு செய்தபோது பேன்சி வெடிகள் தயாரிப்பு நடைபெற்று பெற்று கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தாசில்தரை பார்த்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த மாதவன் மற்றும் 2 தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர். . பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சாத்தூர் மேலப்புதூரைச் சேர்ந்த உதயக்குமார் (33), அதே ஊரைச் சேர்ந்த டேனியல் (26) இருவரிடமும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டாசு தயாரிப்பு செய்ய எவ்வித அனுமதி இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆலையில் இருந்த 170 கிலோ வெடி மருந்து மற்றும் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் கிட்டங்கியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

About Author

error: Content is protected !!