June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வயல்வெளி

பச்சை வண்ணம் குளிர்ச்சி மட்டுமல்ல புதனுக்கும் உகந்தது

பச்சை கலர் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் ஏனென்றால் அவர்க்கு பிடித்த நிறம் பச்சை இன்றளவும் அதிமுகவினர் எங்கும் அவர் படத்தை வைத்தால் பச்சை நிறம் பார்த்தே வைப்பார்கள் அப்படி ஒரு ஆதிக்கம் கொண்டது பச்சை நிறம்
பச்சை நிறம் குறித்து நமது ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்கள் என்ன சொல்கிறார் வாங்க பார்க்கலாம்

பச்சை வயல்வெளிகள் பார்ப்பது கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்திக்கும் குளிர்ச்சி.பச்சை என்பது வர்ணங்களில் மிக முக்கியமான புதனின் அம்சமான கலர்.பெருமாள்தான் புதன் பச்சைமால் பச்சைவண்ணநாதர் என்று அவருக்கு பெயரும் உண்டு.கலிகாலமே புதனின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது கல்கி பகவானும் புதனின் அம்சமாகத்தான் அவதாரம் எடுத்துள்ளார்.

வயல்வெளி

புதன் என்றால் கணக்கு புதன் என்றால் சம்பாஷணையில் பேசுவது புதன் என்றால் வியாபாரம் புதன் என்றால் புத்திக்கு அதிபதி.உங்களுக்கு மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் இந்த பச்சை பசேல் வயல்வெளிகள்.பொதுவாகவே பச்சையை நாம் நேர்மறை வர்ணமாக குறிப்பதுண்டு அதனால்தான் சாலையில் சிக்னல் கூட பச்சை வர்ணம் வந்தால்தான் வாகனங்கள் செல்லும் எல்லோருமே எப்படா பச்சை சிக்னல் போடுவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போம்.
ரயில்நிலையத்திலும் பச்சை கொடி காட்டினால்தான் ரயில் கிளம்பும்.உங்களுக்கு தெரியாத விஷயமல்ல தமிழகத்தில் மிக முக்கிய ஆளுமையாக இருந்த புரட்சி தலைவி அம்மா முன்னாள் முதலமைச்சர் பச்சையை உபயோகித்து நிறைய விஷயங்களை நல்லபலன்களாக மாற்றி அமைத்துக் கொண்டார்.

பச்சை என்றாலே புதன்,எப்பொழுதுமே எனது உடையில் விவரம் தெரிந்த நாளிலிருந்தே வர்ணங்களிலும் கவனம் செலுத்தி வருவதுண்டு.பச்சை வேஷ்டி கட்டியதும் புதனை வலுப்படுத்த மட்டுமேதான்.மேலும் அந்தந்த நாளுக்கு தகுந்த மாதிரியே வர்ணங்களை மாற்றி போட்டு சோதனை செய்து பார்ப்பதுண்டு எப்படி வேலை செய்கிறது என்று.ஒன்று நமது உடையில் அந்த கிரகங்களின் வர்ணத்தைகொண்டு வந்து விட்டால் நமக்கு வேண்டிய விஷயங்களை எப்படியும் அந்த கிரகங்களே நடத்திட வழிவகுக்கும்,

எல்லோரும் பச்சையை உபயோகிக்கலாமா என்ற கேள்வி வரும்.அது அவரவர் ஜெனன ஜாதக கட்டத்தை பொறுத்தே அமையும்,புதன் நல்ல இடத்தில் அஸ்தங்கம் ஆகாமல் மறையாமல் பகை கிரகங்களின் பார்வை பெறாமல் நீச்சமாகாமல் இருப்பது மிக முக்கியமாகும்.இது உடைக்கு பொருந்தும்.ஆயினும் பச்சை வயல்வெளிகள் புல்வெளிகள் மரம் செடி கொடிகள் பார்ப்பது எல்லோருமே செய்ய வேண்டிய நேர்மறை சக்தியாகும்.மரம் செடி நடுபவர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைப்பதும் இதுதான் காரணமாகும்.
உங்களால் ஒரு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பொழுதெல்லாம் ஒரு வயல்வெளி புல்வெளியில் அமர்ந்து சிறிது நேரம் யோசியுங்கள்.

ஜோதிடர் முகவரி

நல்ல முடிவை நீங்களே எடுப்பீர்கள்.#பிரேம்சந்த்_நம்பிராஜன் செல்லிடப்பேசி எண்கள் 9789168398/7708873905 சென்னை

About Author

You may have missed

error: Content is protected !!