May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டால் போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தனியார்
வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
கோரிக்கை.
நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி கோட்டாட்சியர் சௌந்திரராஜன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர், வட்டாசியர்கள் வெங்கடாச்சலம், சங்கர், கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார் குற்றாலம் வனவர் பாண்டியராஜ், தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சிவா, மகேஸ், ஈஸ்வரன் உள்ளிட்ட வேளாண்மைத்துறை, பொதுப்ணித்தறை உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர், வேலுமயில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகீர்; உசேன் என பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் கேட்டு விவாதிக்கப்பட்டது. வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட அருந்தவபிராட்டி குளத்தில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படும் வகையில் சமூக விரோதிகள் மீன்களை பிடித்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தென்காசி, புளியரை, வடகரை, மேலகரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு, நெல் கொள்முதல் நிலையம் அமைத்துள்ளது. அங்குள்ள அதிகாரிகள் விவசாயிகளிடம் முறையாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல், பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்குவதாகவும். தனியார் வியாபாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவவும் புகார் எழுந்துள்ளது.
விவசாயிகளிடம் முறையாக அளவீடு செய்து கொள்முதல் செய்து அதற்கான தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கோட்டாட்சியர் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தார். ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

About Author

You may have missed

error: Content is protected !!