February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நேற்றே எம்.பி .,யானார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார்

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்’ – குச்சனூர் கோவில் கல்வெட்டால் சர்ச்சை
தேனியில் பிரபலமான சனீஸ்வர பகவான் திருக்கோயிலான குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று (16.5.2019) அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்’ என பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அமைந்துள்ளது சுயம்பு சனீஸ்வரபகவான் திருக்கோயில். கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது காசி ஶ்ரீ அன்னபூரணி கோயில். இக்கோயிலில் நேற்று (16.5.2019) கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், கோயிலுக்கு உதவி புரிந்தவர்கள் எனக் குறிப்பிட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் மற்றும் ஓ.பி.எஸ்ஸின் கடைசி மகன் ஜெயபிரதீப் குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில், கோயில் நிர்வாகம், ரவீந்திரநாத்குமாரை எப்படி தேனி எம்.பி என்று கல்வெட்டில் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

About Author

error: Content is protected !!