July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லையின் முதல் பெண் மேயர் வெட்டி கொலை

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

error: Content is protected !!