February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை மாவட்ட முதல் கொரோனா நோயாளி மகாராஜன் டிஸ்சார்ஜ்

நெல்லை மாவட்ட முதல் கொரோனா நோயாளி மகாராஜன் டிஸ்சார்ஜ் ஆனார்

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் மகாராஜன். இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மதுரை விமான நிலையம் வழியாக திருநெல்வேலி வந்த மகாராஜனுக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது.இவரது குடும்பத்தினர் பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே வசித்தாலும் கொரோனா பாதிப்பால் மகாராஜன் தனது வீட்டுக்கு செல்லாமல் திருநெல்வேலியில் உள்ள பிரபல விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து மகாராஜன் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானாகவே முன்வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கொரோனா நோயாளியான இவரை உடனடியாக பாதுகாக்கப்பட்ட தனி வார்டில் அனுமதித்த அரசு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மகாராஜனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் நெல்லையில் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.இந்த நிலையில் மகராஜன் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மகாராஜனின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நேற்று முன்தினம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

பாதுகாக்கப்பட்ட தனி வார்டில் மகாராஜன் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டு வருவதால் உறவினர்கள் உட்பட பார்வையாளர்கள் யாரும் அவரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை

எனவே நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ குழுவினரை நேரில் சந்தித்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மகாராஜனின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்க பட்டுவரும் சிகிட்சைகள் குறித்தும் விசாரித்தார்.தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் மகராஜனுக்கும் அதற்கு பிறகு அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பது கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்

தொடர் தீவிர சிகிட்சைக்கு பிறகு தற்போது மகாராஜனின் உடல்நிலை நன்கு சீரடைந்து வருவதாகவும் இன்பதுரை எம்.எல்.ஏவிடம் கூறிய டீன் டாக்டர். ரவிச்சந்திரன் தொடர்ந்து கூறும்போது

கடந்த இரண்டு வாரங்களில் செய்யப்பட்ட இரு பரிசோதனைகளின் முடிவுகள் மகாராஜன் விரைவாக குணமடைந்து வருவதை காட்டியது. தொடர்ந்து நடைபெறும் பரிசோதனை முடிவுகளும் சாதகமாக வந்தால் அரசுக்கு தகவல் தெரிவித்தபின் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்” என்றும் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார் இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகாராஜன் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவருக்கு நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனால் இன்று மதியம் 2மணிக்கு மகாராஜன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.தனி 108 வாகனம் மூலம் நெல்லை பெருமாள்புரத்திலுள்ளஅவரது இல்லத்திற்கு மகாராஜன் அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது வீட்டில் அவர் 14 நாட்கள் வெளியே வராமல் தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.குடும்பத்தினர் அவரோடு நெருங்காமல் இருக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதைத்தொடர்ந்து அவர் இன்று முதல் 14 நாட்கள் தனது வீட்டில் தனிமையில் இருப்பார்.

அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு பரிசாதனை நடத்தப்பட்டு பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்தால் மகாராஜன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!