May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக  நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளினை கௌரவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி K. P. சண்முக ராஜேஸ்வரன் IPS அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி  பிரவீன் குமார் அபிநபு IPS மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் IPS ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்பு பணியில் இருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர் குடும்பத்தினரை தென் மண்டல ஐஜி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவபடுத்தினார்.

About Author

error: Content is protected !!